மின்சார வாரியஎம்ப்ளாயீஸ் பெடரேசன் மாநில செயற்குழுகூட்டம் திருச்சியில் நடந்தது.. - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 28, 2026

மின்சார வாரியஎம்ப்ளாயீஸ் பெடரேசன் மாநில செயற்குழுகூட்டம் திருச்சியில் நடந்தது..


 தமிழ்நாடு மின்சார வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாநில செயற்குழு கூட்டம் இன்றும், நாளையும் திருச்சி அஜந்தா ஹோட்டலில் மாநில தலைவர் ஜெ.எல். பாஸ்டின் ராஜ் தலைமையில் நடைபெறுகிறது

திருச்சி மின் வட்ட செயலாளர் சிவச்செல்வன் முன்னிலை வகித்தார்.

பொதுச்செயலாளர் சேக்கிழார் மின்சாரவாரியத்தில் ஊதிய உயர்வுக்கான முத்தரப்பு  ஒப்பந்தம் கையெழுத்தாகி பணப்பயன்கள் அளித்துள்ளதற்கு மின்சாரவாரியத் தலைவருக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்து சிறப்புரையாற்றினார்.

அலுவலர்களுக்கும் பொறியாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கும் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை என்ற கால அளவில் வழங்க வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி 9613 கேங்மேன் பணியாளர்களையும் ஒரே நேரத்தில் கள உதவியாளர்களாக பதவி மாற்றம் செய்திட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 1850 ஐடிஐ படித்தவர்களுக்கு நடைபெற்றுள்ள தேர்வு முடிவை வெளியிட்டு பணியமர்த்திட வேண்டும், மீதமுள்ள கள உதவியாளர் காலியிடங்களில் ஐடிஐ அப்ரண்டிஸ் முடித்தவர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் விடுபட்ட கேங்மேன் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து நிரப்ப வேண்டும்.

பகுதி நேரப் பணியாளர்கள் இல்லாத1000க்கு மேற்பட்ட அலுவலகங்களுக்கு பணியமர்த்திட வேண்டும். 

ஸ்மார்ட் மீட்டர் உள்ளிட்ட தனியார் மயப்படுத்துதலை கைவிட வேண்டும். 

44 தொழிலாளர் நல சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக 1.4.26 முதல் அமல்படுத்த உள்ள ஒன்றிய அரசைக் கண்டித்து மின்சாரத் தொழிலாளர்கள் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் ஏப்ரல் 1 ம் தேதி கருப்பு அட்டை அணிந்து பணிக்கு செல்வது என்பன

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மாநில பொருளாளர் பழனி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages